கண்ணன் குரல் – ஓர் அறிமுகம்

 

நமது கண்ணா அறக்கட்டளை (வர்மக்கலை ஆராய்ச்சி மற்றும் மருத்துவம்) வாகரி – உடல்நல மேலாண்மை பயிற்சி மற்றும் முத்திரை அறிவியலின் மூலமாக பலவிதமான நோய்களுக்கு தீர்வு அளித்து வரும் தன்னலமற்ற தொண்டு அமைப்பாக திகழ்கிறது.

மனித சமுதாயம் மேம்பாடு அடைய நமது அறக்கட்டளையின் மற்றொரு பரிமாணமாக இந்த கண்ணன் குரல் மாத இதழை வெளியிட்டிருக்கிறோம் என்பதை உவகையுடன் தெரிவித்து கொள்கிறோம்.

நமது கண்ணன் குரல் மாத இதழானது முத்திரை அறிவியியல், பண்டைய கால யோக இரகசியங்கள், நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள், தமிழர் பாரம்பரியம் மற்றும் மருத்துவ முறைகள் இவைகளுடன் வாசகர் பங்களிப்பையும் கொண்டு ஒரு பல்சுவை இதழாக உள்ளது.

தனிச்சிறப்பு வாய்ந்த தமிழ் சமுதாய பெருமைகளை கற்றுக் கொள்ளவும், கற்பிக்கவும் ஓர் வாய்ப்பை உருவாக்குவோம். பயனுள்ள வாழ்க்கையைப் பெற்று பல்லாண்டு வாழ வழிகாட்ட அனைவரும் ஆதரவளிப்போம்.

ஆயுள் முழுவதும் ஆரோக்கியம்

சுயசார்புள்ளமனிதனே மகத்துவமானவன்